Saturday, April 2, 2011

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் அறிக்கை



தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் கூறியுள்ள வாக்குறுதிகள்:

* இளைஞர்களின் எதிர் காலம் கருதி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

* வேலை இல்லா காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்க கட்சி வற்புறுத்தும்.

* சிறு வணிகத்தில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதை தடுக்க போராடுவோம்.

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.

* ரேசன் கடைகள் மூலம் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலையில் வழங்க வேண்டும்.

* அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். இலவச மின்சாரம் கேட்கும் தகுதியுடைய அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்க போராடுவோம்.

* தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து மாற்று ஆட்சியை கொண்டு வருவதன் மூலமே மக்கள் நலன்களை பாதுகாக்க முடியும் உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

* விவசாய விளைபொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். குறிப்பாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,000 என்ற விலையில் கொள்முதல் செய்ய வேண்டி கட்சி போராடும்.

* அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையில், நியாயமான விலையில் அனைவருக்கும் கிடைத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும், உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.

* மின் தடையை அறவே ரத்து செய்திடவும், புதிய மின் திட்டங்கள் கொண்டு வரவும் கட்சி பாடுபடும். இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் உடனுக்குடன் மின் இணைப்பு கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

* சீரழிந்து வரும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், கிரிமினல்மயமாகி வரும் அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராடுவோம்.

நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கவும், நிலக் குவியலை முடிவுக்குக் கொண்டு வரவும், மிச்ச நிலங்களையும், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களையும், நிலமற்ற ஏழை, தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

தேசிய வேலை உறுதிச் சட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தவும், ஆண்டில் 150 நாள்கள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச தினக்கூலி ரூ.200 வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், தாற்காலிகம், ஒப்பந்தம் என்ற அடிப்படையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணி வரன்முறையுடன், வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்க கட்சி போராடும்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு மாநில சுயாட்சி வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடுகளை செய்யும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்.

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கிடைத்திட கட்சி பாடுபடும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் கிடைத்திடவும், கல்லூரிக் கல்வி வரை அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் இலவசக் கல்வி கிடைத்திடவும், கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

சுய உதவிக் குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டியில் கடனுதவி கிடைக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவும் கட்சி போராடும். காவல் துறை சீர்திருத்தத்துக்கு கட்சி குரல் கொடுக்கும்.

சுயேச்சையான அமைப்பு மூலம் கூட்டுறவுத் தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும், உடனடியாகவும் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி போராடும். உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை வலுப்படுத்தவும், மாநில அரசின் மொத்த வருவாயில் 30 சதவீதத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கிடவும் கட்சி பாடுபடும்.

சட்டப்பேரவை ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சட்டப்பேரவை கூடும் நாள்களை அதிகப்படுத்தவும், அங்கு மக்கள் பிரச்னைகள் உரிய முக்கியத்துவத்துடன் விவாதிக்கப்படவும், எதிர்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கிடவும் கட்சி குரல் கொடுக்கும்.

பொது வாழ்வில் மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளித்து, அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை உறுதியாக கடைப்பிடித்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அரசியல், சமூக, பொருளாதாரம் உள்பட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. எங்கள் பிரசாரமும் தொடங்கி விட்டது. அகில இந்திய நிர்வாகிகளான பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் பிரசாரம் செய்ய தமிழகத்திற்கு வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கலைக்குழுவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை இந்த தேர்தலில் நாங்கள் அனுமதிக்க மாட்டடீம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற பணப் பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் போலீஸ் எஸ்கார் வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது. இதையும் தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூர், தஞ்சை, திருச்சி பொதுக் கூட்டங்களில் பேசி உள்ளார். ஒரு இடத்தில் கூட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. விலைவாசி உயர்வு, ஊழலை ஒழிப்பது, மின்வெட்டுக்கு தீர்வு குறித்து பேசவில்லை. தேர்தல் ஆணையத்தைப் பற்றித்தான் கடுமையாகச் சாடியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

234 தொகுதியிலும் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 29, 2011

10 கிராம் நகையும் அஞ்சலக சேமிப்பும்! 10 வருடம் எம்.எல்.ஏ




கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே. 

திண்டுக்கல் ஸ்டேட் பாங்க் (மெயின்)கில் ரூ.3,170ம், சென்னை அண்ணா நகர் இந்தியன் வங்கியில் ரூ.38ம் பணம் வைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் நேருஜி நகர் இந்தியன் வங்கியில் ரூ.1000 கட்டியுள்ளார். 

தனது ஊரான கதிரணம்பட்டி அருகேயுள்ள ரெட்டியார் சத்திரம் அஞ்சலகத்தில் சிறு சேமிப்பில் ரூ.42,472ம், தொடர் வைப்பு நிதியில் ரூ.43 ஆயிரமும் வைத்துள்ளார். கட்சியில் கொடுக்கும் ஊதியத்தைக் கொண்டு மாதா மாதம் கடந்த பல வருடங்களாக சேமித்த தொகைதான் இந்த 85,472 ரூபாய் ஆகும். 

மேலும் நகைகளாக 2 கிராம் தோடு, 8 கிராம் செயின் வைத்துள்ளார். இந்த 10 கிராம் நகையும் கடந்த 10 வருடங்களாக அவர் வைத்துள்ள நகைதான். கடந்த தேர்தலின் போதும் இந்த நகைகளை கணக்கில் காட்டினார். அன்றைக்கு 2 கிராம் தோடுக்கு ரூ.1200 விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதன் இன்றைய மதிப்பாக ரூ.3950 காட்டப்பட்டுள்ளது. இதே போல் 8 கிராம் செயினுக்கு ரூ.6400 அன்றைய மதிப்பு. அந்த செயினுக்கு இன்றைய மதிப்பு ரூ.15,600 காட்டப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து230 ரூபாய் 96 பைசாதான் அவரது சொத்து மதிப்பு. கையிருப்பு ஏதும் இல்லாமல் போட்டியிடுகிறார். வேட்புமனுத்தாக்கலின்போது அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை பார்த்து கையிருப்பே இல்லாத வேட்பாளர் கே.பாலபாரதி என பத்திரிகைகள் எழுதின. 

எதிரணியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பால்பாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற சொற்களுக்கு சொந்தக்காரர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பதற்கு ஓர் இலக்கணமாக உள்ளார் கே.பாலபாரதி. 

- இலமு, திண்டுக்கல் 
நன்றி: தீக்கதிர்

Thursday, January 20, 2011

தோழர் பாப்பா புரட்சிகர பெண் போராளி


தோழர் பாப்பா உமாநாத் புரட்சிகர கம்யூனிஸ்ட்; உத்வேகம் ஊட்டக்கூடிய வீரம் மிக்க தலைவர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்; அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் தனது 81வது வயதில் திருச்சியில் டிசம்பர் 17ம் தேதி காலமானார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு துணைவராக, சக தோழராக பயணித்த தோழர் ஆர்.உமாநாத் உடல் நலிவுற்றிருந்த போதும், உள்ள உறுதியோடு முஷ்டி உயர்த்தி அவருக்கு செவ்வணக்கம் செலுத்தினார்.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண் களும் அந்த மகத்தான தலைவருக்கு பிரியா விடை கொடுக்க வந்திருந்தனர். அவர்களால் கண்ணீரை அடக்க முடிய வில்லை.

தோழர். பாப்பா தனது 11வது வயதில் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தனது அரசியல் வாழ்வை துவக்கி னார். 1946ஆம் ஆண்டு நடைபெற்ற வர லாற்றுச் சிறப்பு மிக்க ரயில்வே தொழிலாளர் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே தொழிலாளர் கள் ஐவர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களுக்கான நினைவுச்சின் னம் பொன்மலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தான் தோழர். பாப்பா போலீசாரின் லத்திக் கம்பு தாக்குதலுக்கு முதன் முதலாக இலக்கானார். உழைக்கும் வர்க்க குடும்பத்தின் உன்னத புதல்வியான அவரது இறுதிப்பயணம் அதே மண்ணில் வந்து முடிவடைந்தது.

அந்த வீரம் செறிந்த மண்ணிலேதான் அவரது அரசியல் வாழ்வு பிறந்தது. அது முதல் அவர் தனது கடைசி மூச்சுவரை உழைக்கும் வர்க்க லட்சியங்களுக்கு உண் மையானவராக செயல்பட்டார். என்றென்றும் வீர உணர்வு ஊட்டுகின்ற பொன்மலை மண்ணில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது. அவரது வர்க்க அர்ப்பணிப்பின் சாட்சியமாக அமைந்தது.

அவரது 70 ஆண்டு பொதுவாழ்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணற்ற நிகழ்வு களையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களையும் அவர் கண்டார். 1945ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ரான அவர், குழந்தைப் பருவத்திலேயே தேசிய இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற் றார். பாப்பா எட்டாம் வகுப்பு வரைதான் பள் ளிப்படிப்பைத் தொடர முடிந்தது. அதற்கு மேல் படிக்க வைக்க அவரது விதவைத் தாயாரால் முடியவில்லை. தான் பெற்ற கல்வி என்பது புத்தகங்களிலிருந்து அல்ல, மாறாக, கண்ணியமான வாழ்க்கைக்காக நாள்தோறும் நடைபெற்று வந்த தொழிலா ளர்களின் போராட்டங்களிலிருந்தே பெற்ற தாக தோழர் பாப்பா அடிக்கடி கூறுவார்.

அவர் பிறந்த சூழ்நிலை, மிகவும் தைரிய சாலியான அவரது தாய் அலமேலு தன்னு டைய அரசியல் பணிகளிடையே அவரை உறுதிமிக்க பெண்ணாக வளர்த்த விதம், செங்கொடி இயக்கத்தின் உணர்வுபூர்வ மான வீராங்கனையாக அவரை வளர்த் தெடுத்தது.

பாப்பா மிகவும் உறுதிமிக்கவர். சுதந்திர போராட்ட காலத்திலும், சுதந்திர இந்தியாவி லும் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை அவர் சிறைசென்றுள்ளார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி இரண் டாகப் பிரிந்த சமயத்தில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இந்திய - சீன யுத்தம் நடைபெற்ற சமயத்திலும், இந் திய பாகிஸ்தான் போரின் போதும் அவர் கைது செய்யப்பட்டார். பொன்மலையில் பிரிட் டிஷாருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடைபெற்ற சமயத்தில் அவர் அதில் கலந்துகொண்டார் என்பதற்காக அவரது 12 வயதில் முதன்முறையாக கைது செய்யப்பட் டார். அவர் இளம் வயதினராக இருந்ததால் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப் பட்டார்.

1946இல் தொழிலாளர் வேலைநிறுத்தத் தின்போது பாப்பா உறுதியாகச் செயல்பட் டார், தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப் பாக்கிச் சூட்டில் ஐந்து தொழிலாளர்கள் கொல் லப்பட்டதை அவர் கண்ணால் கண்டார்.

1948ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து கம்யூ னிஸ்ட்டுகள் மற்றும் தொழிற்சங்க இயக்கங் கள் மீது மீண்டும் அடக்குமுறை ஏவப்பட்டது. பாப்பாவும் அவர் தாயாரும் சென்னையில் இருந்த தலைமறைவு தோழர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கேதான் தோழர் உமாநாத்தை பாப்பா சந்தித்தார். சில ஆண்டுகள் கழித்து அவர் கள் திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் செயல்பட்ட தலைமறைவு யைத்திற்கு உதவச்சென்ற இந்தக் காலம் அவரது வாழ்வில் சோதனைமிக்க காலமாக அமைந்தது. காவல்துறையினர் தலை மறைவு மையத்தை சோதனை செய்தனர். சில தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். பாப்பாவும் அவர் தாயாரும் பல்லாவரம் காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். கைதாகாத தோழர்கள் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்வதற்காக, காவல்துறையினர் பாப்பாவை அடித்து நொறுக்கினர். அவரும் அவர் தாயாரும் சைதாப்பேட்டை கிளைச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். அங்கு நிகழ்ந்த கடுமையான சித்ர வதை கொடுமை தாங்காமல் பாப்பா அங்கி ருந்த ஒரு மண் சட்டியை எடுத்து உயர் அதி காரி ஒருவர் மீது எறிந்தார். இதனால் பாப்பா மீது மேலும் கடுமையான அடிகள் விழுந்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் பல ஆண்டுகள் இருந்தன. காவல்துறையினரின் சித்ர வதைகளுக்கு எதிராக பாப்பாவும், அவர் தாயாரும் தோழர் உமாநாத்துடன் சேர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். 22 நாட்கள் வரை உண்ணா விரதம் நீடித்தது. பாப்பாவை அவரது தாயி டமிருந்து பிரித்தனர். அவரது தாயாரின் நிலை மேலும் மோசமானது. பின்னர் சிறை யிலேயே அவர் மரணமடைந்தார். மரணம் அடைந்த தகவல் ஒரு சிறைக்காவலர் மூலம் பாப்பாவிற்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அவர், இறந்த தன் தாயாரைப் பார்க்க அனு மதிக்கப்படவில்லை. பாப்பா, தன் தாயாரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்சி உறுப்பி னர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து விட்டேன் என்று எழுதிக்கொடுத்தால் மட் டுமே தாயாரின் உடலைப் பார்க்க முடியும் என்று கூறியிருக்கின்றனர். இதனை ஏற்க பாப்பா மறுத்துவிட்டார். பக்கத்து சிறையில் வைக்கப்பட்டிருந்த தன் தாயாரின் உடல் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்ட பாப்பா, சத்தமிட்டுக் கதறவில்லை. ஆனால், பின் இரவில் தனியாகத் தான் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கையில் விம்மி விம்மி அழுதிருக்கிறார். அவரது தாயார். தான் இறந்தபின் தன் உடல்மீது செங்கொடி வைத்துப் போர்த்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். தாயாரின் ஆசையை நிறை வேற்ற முடியவில்லையே என்பதில் பாப்பா விற்கு மிகுந்த சோகம். இதனை பாப்பா அடிக்கடி நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார். அத்தகு மாபெரும் மனவலிமையை பாப்பா பெற்றிருந்தார்.

கொஞ்சம் கூட சளைக்காமல் அநீதிக்கு எதிராகப் போராடும் உறுதியையும், ஆற்ற லையும் பாப்பா பெற்றிருந்தார். மக்களுடன் எப்போதும் உயிரோட்டமான தொடர்பை கொண்டிருந்ததுதான் இதற்குக் காரணமா கும். அதே நேரத்தில் சுரண்டலால் பாதிக்கப் பட்டவர்களின் தனிப்பட்ட வழக்குகளைக்கூட கூட்டுப்போராட்டமாக மாற்றக்கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டபோது, அந்த சங்கத் தில் விவசாயத் தொழிலாளர்களை சேர்ப்ப தற்காக அவர் பணியாற்றிய காலத்தில் அவர் இந்தத் திறமையை முதன்முதலாக வெளிப்படுத்தினார்.

இந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் கவிஞர் என்று புகழ்பெற்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்துடன் சுற்றுப்பய ணம் செய்தார். ஒரே நாளில் 23 கூட்டங் களில் அவர் பேசியிருக்கிறார். இவ்வாறு செயல்படுவதற்கான சக்தியும் ஆர்வமும் ஒரு சிலருக்குத்தான் சாத்தியம். அதில் தோழர் பாப்பாவும் ஒருவர். இதனை அவர் தன் அத்துணை அரசியல் நடவடிக்கைகளி லும் கொண்டுவந்தார். போராட்டம் எங்கே நடை பெற்றாலும் அங்கே தோழர் பாப்பா இருப்பார்.

கோயம்பத்தூரில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தேசிய மாநாடு நடைபெற்றபோது, தயாரிப்புப்பணிகளில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டிருந்தோம். பாப்பா அப்போது எழுதிக்கொண்டும், ஊழி யர்களுக்குக் கட்டளையிட்டுக்கொண்டும், முழக்கங்களைத் தயார் செய்து கொண்டும், சமைத்துக் கொண்டும் அனைத்தையும் ஒரே சமயத்தில் செய்து கொண்டிருப்பார். எங்களுக்காக மதிய உணவு சமைப்பதில் அவர் மிகவும் குறியாக இருந்தார். கடைசி முறையாக நான் அவரைத் திருச்சியில் பார்த்தேன். அவர் உடல் நலமின்றி இருந்த போதிலும் கான்பூரில் நடைபெறவிருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் பங்கேற்க மிகவும் ஆர் வத்துடன் இருந்தார். ஆனாலும் அது அவ ரால் முடியாமல் போயிற்று. பாப்பா இறக் கும்வரை ஸ்தாபனம் குறித்தும் இயக்கம் குறித்தும்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந் தார் என்று தோழர் உமாநாத் கூறினார். அவர்களுக்கு இடையே நிலவிய உறவு என் பது அறுபதாண்டுகளுக்கும் மேலா னது. இந்த அறுபதாண்டுகளும் அவர்கள் இருவ ரும் கட்சிக்காக சுயநலமின்றி உழைத்தார்கள்.

தோழர் பாப்பாவின் பணியும் அவர் குறித்த நினைவுகளும் நாட்டின் உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வுக்காகப் போரா டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

தமிழில்: ச.வீரமணி